பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் எனும் தலைப்பில் அமைந்த இந்நூல், வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி களை உருவாக்கிய, உலகப் புகழ்பெற்ற வீரர்கள் வீராங் கனைகள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புப் பெட்டகமாகும்.

‘நான் எப்படி இருந்தேன் தெரியுமா என்று தன்னைப் பற்றிய பழம்புராணப் பேசித் தருக்கித் திரிந்து, தற்காலத்தில் தடுக்கி விழுகின்ற தரங்கெட்ட நிலையில் உழல்கின்ற மனிதர்களை சுமந்து திரிகின்ற தரணியில், ‘எப்படி இருந்தேன் என்பதில் எழிலுமில்லை, ஏற்றமு மில்லை. எப்படி இன்று இருக்கிறேன் என்பதிலே தான் எல்லா சிறப்பும் திறமையும் இசைபாடுகின்றன’ என்று சொல்வதைப் போல செய்து காட்டிய, செழுமை ஊட்டிய வீரர்களின் விவேகம் நிறைந்த வீர வரலாற்று நிகழ்ச்சிகள்தான் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

'உண்மையான லட்சியத்தை உவந்து உள்ளத்தில் ஏற்றுக் கொண்டால், ஏற்றிக்கொண்டால், உலகம் காட்டும் எதிர்ப்பும், வறுமை காட்டும் மறுப்பும், வஞ்சகம் நிரப்பும் புரட்டும், நோய்கள் பழிக்கும் மிரட் டலும் எல்லாம் எதிர் நில்லாது ஒழிந்துபோம், இறுதியில் லட்சியமே ஜெயிக்கும், என்று, உண்மையை நிலைநாட்டிப் புகழ் பெற்ற வீரர்களின் பட்டியலையே இங்கு தொகுத்துத் தந்திருக்கிறேன்.

லட்சியம் இல்லாத வாழ்க்கை விலங்கு வாழ்க்கை யாகும். நெறிமுறையில்லாத வாழ்க்கை பேய்பிடித்த குரங்கின் செயல்களை விடக் கீழ்மை நிறைந்ததாகும்.