பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 எஸ். நவராஜ் செல்லையா

மீட்டர் தொடரோட்டத்தில் நான்காவது ஒட்டக்காரனாக ஒடி முடித்த போது. ஒடிய நேரம் 8.6 வினாடிகள் என்றும் கணக்கிட்டிருக்கின்ருர்கள். அப்படியென்ருல் அந்த வீரனின் வேகம் தான் என்னே!

நடக்கத் தெரியாத பையன் என்ற ஒரு நையாண்டிக்கு ஆளான ஒருவன், ஒடுவதற்காக குத்துக்களையும் உதைகளையும் வாங்கியவன் உற்சாகமாக உ ைழ க் க வேண்டும் என்று எண்ணி உழைத்தான். உண்மையான உழைப்பு அவனை உலகத்தாரின் முன்னே உயர்த்தியது. இன்று அ ழி யா ப் புகழில் அவன் வாழ்கிருன். உலகம் உள்ளளவும் அவன் பெயர் நிலைத்து நிற்கும்.

இளமையின் எழுச்சியை சிறப்பான வழியில் பயன் படுத்தி, சிறப்பினைப் பெற்று, புகழ்பெற்ற பாப் ஹேய்ஸ், நமக்கெல்லாம் நல்ல வழிகாட்டியன்ருே!