பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 53.

யும் பெற்று, செக்கோசுலோவோகியா நாட்டிலிருந்து ஒரு வீரன் உதயமாகியிருக்கிருன் என்பதை உலகுக்கு உணர்த்தி விட்டு, நான்காண்டுகள் கழித்து ஹெல்சிங்கியில் 1952ல் நடைபெறுகின்ற ஒலிம்பிக் பந்தயத்திற்கு வந்தான். அப்பொழுது அந்த வீரன் 29 வயது இளைஞனாக இருந்தான்.

முதல் ஒட்டப்போட்டி 10,000 மீட்டர் தூரம். உலகிலிருந்து வந்த பல சிறந்த வீரர்களிடையே நடந்த கடும் போட்டியில் 320 கெஜ தூரம் முன்னல் ஓடிவந்து ஒலிம்பிக் சாதனையை நி க ழ் த் தி, தங்கப்பதக்கத்தை வென் முன்.

அடுத்த போட்டி 5000 மீட்டர்துாரம். அந்தப் போட்டி யிலும் இரண்டாவதாக வந்த வீரனுக்கு நான்கு கெஜ தூரம் முன்னல் ஓடிவந்து, புதிய சாதனையை ஏற்படுத்தினன். இத்துடன் அவன் மனம் சமாதானம் அடைந்து விடவில்லை. முன்ருவது போட்டியிலும் கலந்து கொள்ளப் போகிறேன் என்று அறிவித்தும் விட்டான்.

அது தான் மிகவும் கொடுமையான தன்மை வாய்ந்த போட்டியான மாரதான் ஒட்டப் போட்டியாகும். 26 மைல் 385 கெஜதுாரம் ஒடும் போட்டியாகும். இதுவரை ஒடிப் பழக்கமில்லாத போட்டியில் கலந்துகொள்வதாக அறிவித்து விட்டு, 52 வீரர்களில் ஒருவகை வந்தும் நின்ருகிவிட்டது. மேடு பள்ளம் நிறைந்த சாலைகளில் ஒடக்கூடிய ஒட்டம் அது. முதலும் முடிவும் ஒலிம்பிக் மைதானத்தில் இருக்கும், அந்தப் போட்டியையும் மிகவும் சர்வசாதாரணமாக ஒடி முடித்தபோது நிகழ்த்திய ஒலிம்பிக் சாதனையானது முன்பு இருந்ததை விட 6 நிமிடங்கள் 16 வினாடிகள் குறைவாக இருந்தது தான் சுவையான குறிப்பாகும் அதிலும் விசேஷக் குறிப்பானது, ஒடி முடித்து ஒய்வெடுத்து, அவன் ஆப்பிள் நின்று கொண்டிருக்கும் போது இரண்டாவதாக வரும் விான் மைதானத்திற்குள் நுழைந்தான்.

ஏழு நாட்களுக்குள் மூன்று கடுமையான போட்டிகளில் பங்கு பெற்று உலக சாதனைகள் நிகழ்த்திய வீரனது பெயர்