பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 55

மனதால் நினைக்கும் பொழுது எளிது என்றுதான் தோன்றும். செயலால் படும் பொழுது தான் அந்தவேதனை யும் சோதனையும் புரியும். அத்தகைய அரிய முயற்சியை விடேன்’ என்று தொடர்ந்து, தன்னையே தகுதியுள்ளவகை மாற்றிக் கொண்டு, இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் அவன் தொடர்ந்துவெற்றிபெற்ருன். அற்புதம் செய்த ஆற்றல் மிகு வீரன் எமில் செட்டபக்கின் மனைவி அதே ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான, வேலெறியும் போட்டியில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் பெற்று, உலகத்தையே வியப்பில் ஆழ்த்தினுள்.

தங்கப் பதக்கம் பெற்ற தங்க நிகர் தம்பதியர்களே உலகம் இன்றும் வாழ்த்துகிறது. நான்கு தங்கப் பதக்கங்களே கொண்டு சென்ற தம்பதியரின் திறமையை அறிந்து இன்று நாமும் வாழ்த்துகிருேம்.