பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 எஸ். நவராஜ் செல்லேயர்

பெருந்தன்மை என்பது உடனே ஒருவருக்கு உதித்து வந்து விடும் பண்பு அல்ல. கொஞ்சங்கொஞ்சமாக சிறு துளி பெருவெள்ளம் போல, அவ்வப்போது பெறும் அனுபவங் களின் மூ ல ம க மலரும் அறிவில்ை உண்டாவதாகும். அத்தகைய அனுபவங்களையும் அறிவினையும் விளையாட்டுத் துறை வ ழங்குகி றது. என்கின்ற உண்மையைத்தான் இந் நிகழ்ச்சி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

பெருமை தரும் பெருந்தன்மையை உருவாக்கித் தந்து உயர்த்துகின்ற பேராண்மை மனம் பெறுவோம். அதுவே நம்மை மற்ற மனிதர்களிடமிருந்து உயர்த்திக் காட்டும் என்பதை உணர்ந்து, உண்மையை மதிப்போம். விதிவழி நடப்போம். நீதியைப்போற்றும் நெஞ்சத்தை வளர்ப்போம்:

என்று இன்றே உறுதி எடுத்துக் கொள்வோமாக!