பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 67

ஏற்று, அமெரிக்க நாட்டிலிருந்து, தன் நகரமான லண்டன் வர பயணமானன். அப்பொழுது அவன் செய்த உ ல க சாதனையைப் பாராட்டி ஒரு ரசிகர், தங்கச்செயின் கொண்ட கைக்கெடிகாரம் ஒன்றைப் பரிசளித்துப் பாராட்டி திருப்தி யடைந்து போய்விட்டார்.

ஆயிரமாயிரம் பாராட்டுப் பரிசுகளில் இதுவும் ஒன்று என்று மறந்துபோன செபாஸ்டியன், விமானமேறி, லண்டன் வந்து இறங்கிய பொழுதுதான் விழிக்கவும் மிரளவும் நேர்த் தது. பையுடன் வந்த வீரனே வழிமறித்துக் கொண்டார்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகள். சோதனை போடத்

தொடங்கினர்கள்.

தங்கச் செயினப் பார்த்ததும், தாவிக் குதிக்கத் தொடங்கினர் ஒர் அதிகாரி. எங்கே, என்ன, எப்படி என்ற வாறு பல்வேறு விதமான தோரணையில் கேள்விமாரி பொழியத் தொடங்கினர். பின்னர் பயப்படுத்தத் தொடங் கினர். அபராதம் கட்டவேண்டும் என்று அச்சுறுத்தினர். ஆணையிட்டார்.

ஒன்றும் புரியாமல் செபாஸ்டியன் சிலையாகி விட்டான். கடத்தல் என்ற பாணியில் கேள்வி கேட்டால் எப்படி! வரி என்று அதிகப் பணம் என்ருலும், கையிலே பணமோ இல்லை. இந்த வீரனின் முகத்தைப் பார்த்தும் அந்த அதிகாரிகளுக்கு ஒன்றும் தெரியவில்லை. பாஸ்போர்ட்டைப் பார்த்தும் பெய ரும் தெரியவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனல் மேல் நிற்பவனைப்போல, அகில உலகப் புகழ்பெற்ற வீரன் திண்டாடித் திகைத்துப்போய் நின்றபொழுது....இன்னுெரு அதிகாரி வந்தார்.

செபாஸ்டியனைப் பார்த்தார். சிவந்த முகத்தில் சந்தோ ஷம் மலர்ந்து வந்தது. அச்சுறுத்திய அதிகாரியைப் பார்த்து ஆத்திரம் அடைத்தார். இந்தத் தங்கச் செயினுக்காகவா