பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 எஸ். நவராஜ் செல்லையா

கூடைப் பந்தாட்டப் போட்டியில் 3 ஆண்டுகள் தொடர்ந் தாற்போல், வெற்றி பெறச் செய்து, சிறந்த ஆட்டக்காரி என்ற புகழையும் பரிசையும் தட்டிச் சென்ருள் பேபி.

அந்தப் புகழுடன் போதுமென்று இருந்துவிட மன மில்லை பேபிக்கு. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு ஒலிம்பிக் சாதனைகளை முறியடிக்க வேண்டும்; தங்கப் பதக்கங்கள் பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் தான், மாலேயில் வேலைக்குப் பிறகு இரண்டு மணி நேரப் பயிற்சிகள் போதாது என்று, இரவு 9 மணி வரையிலும் பயிற்சிகளைத் தொடர்ந்தாள்.

பயிற்சி எப்பொழுதும் யாரையும் கைவிடுவதில்லை. நீளத்தாண்டும் நிகழ்ச்சியில் 18 அடி 8 அங்குலம் தாண்டிய முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்ருள். இதற்கிடை யில்தான் 1932ம் ஆண்டு நடக்கப்போகும் ஒலிம்பிக் பந்தயம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்கான வீரர்களையும் தேர்ந்தெடுக்கின்ற நேரமும் வந்தது.

அமெரிக்க நாடெங்கிலும் இருந்து 200க்கு மேற்பட்ட வீராங்கனைகள், ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புத் தரும் தேர்வினில் கலந்து கொள்ள வந்திருந் தார்கள். ஒவ்வொரு விளையாட்டுக் குழுவும் தங்களது பிரதிநிதிகள் என்று 15 அல்லது 20 வீராங்கனைகளை அனுப்பி வைத்திருந்தன. எம்ப்ளாயர்ஸ் கேஷாவாலிட்டி கம்பெனி யிலிருந்து ஒரே ஒரு பிரதிநிதியாக பேபி வந்திருந்தாள்.

ஒவ்வொரு கம்பெனியிலிருந்தும் குழுவிலிருந்தும் வந்தி ருக்கின்ற வீராங்கனைகளை ஒலிபெருக்கியால் அழைத்து, பார்வையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிமுகம் செய்து வைக்கின்ற நிகழ்ச்சி நடந்தது. அவள் கம்பெனியார் அனுப் பிய ஒரே ஒருத்தி என்று பேபியை அறிமுகப் படுத்தினர்கள். எல்லோரும் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தனர். அவள் 10 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போகிருள் என்றதும், எல்லோரும் இன்னும் ஆவலுடன் பார்த்தனர்! அந்தப் பார்வையில் ஆச்சரியம் மட்டுமல்ல, இகழ்ச்சியும் கலந் திருந்தது.