பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1980 களில் தொடர்கதைகள் எழுதுவதில் வெற்றி பெற்ற லசஷ்மி (டாக்டர் திரிபுரசுந்தரி) இடைக்காலத்தில் எழுதாமல் இருந்து, பிறகு எழுத ஆரம்பித்து நிறையவே எழுதிய போதிலும் 40 வருடங்களுக்கு அப்புறமும் . வாசகர்களின் கவனிப்பையும் ஆதரவையும் முன்போலவே

பெற முடிந்தது.

சிவசங்கரி, இந்துமதி போன்ற ஸ்டார் எழுத்தாளர் களின் எழுத்துக்கள் அதிகம் அதிகமான வாசகர்களின் ஆதரவைப் பெற்றன. சமீப வருடங்களில் அவற்றுக்கு முன்புபோல் வாசக வரவேற்பு இல்லை என்றே தெரிகிறது.

எழுத்து நடையிலும், கதை சொல்லும் முறை யிலும், கதைகளுக்கு எடுத்துக் கொண்ட விஷயத்திலும், "இளமை, இனிமை, புதுமை, சுவாரஸ்யம், கிளுகிளுப்பு எல்லாம் கலந்து எழுதிய சுஜாதா வாசகர்களிடம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தினார். அவருடைய எழுத்துக் களை விரும்பிப் படிக்கும் வாசகர்கள் அதிகரித்தனர்.

அவரைப் போலவே எழுதக் கற்றுக் கொண்டு பலர் கதை எழுத முற்பட்டார்கள். அவரும் அதிகம் அதிகமாக எழுதும் ஆசையோடு பல ப த் தி ரி ைக களிலும் எழுதினார். புதுமையும் நயமும் குறைந்தன. வாசகர்கள் கவனம் இளையவர்கள் பக்கம் திரும்பி

விட்டது.

சுஜாதாவை விட அதிகம் கவனிப்புக்கும் வரவேற்புக்கும் உரியவர் ஆனார் பாலகுமாரன்.

இ வாசகர்களும், விமர்சகர்களும் 98.