பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒன்றிரண்டு வருடங்களுக்குத் தான். புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் எழுதும் பூரீ வேணுகோபாலனுக்கும் வாசகர்களின் பேராதரவு கிடைத்தது.

ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார் பத்திரிகை உலகில் ஒளிரும் நட்சத்திரங்கள் ஆகிவிட்டார்கள்.

சரித்திர நாவல் எழுதுவதில், கல்கிக்குப் பிறகு பெரும் மதிப்பையும் வாசக ஆதரவையும் சாண்டில்யன்

பெற முடிந்தது. 1960 களிலிருந்தே.

வாசகர்கள் தொடர்கதைகளுக்கு (நாவல்களுக்கு) மட்டும் தான் ஆதரவு காட்டுவார்கள் என்பதில்லை. கட்டுரைகளினாலும் பெரும் பலர் ஈர்க்கப்படுவது உண்டு.

கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம்' மிக அதிகமான வாசகர்களைக் கவர்ந்தது. புத்தகமாக வந்தும் அது பலப் பல பதிப்புகளைக் கண்டு வருகிறது.

உதய மூர்த்தியின் சிந்தனைக் கட்டுரைகளை

ரசித்துப் படிக்கிற வாசகர்கள் எண்ணிக்கைக்கும் குறைவில்லை.

இ.இ 穩

இ வாசகர்களும் விமர்சகர்களும் 99