பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வெட்டமிட்டு அமர்ந்தார்கள் வாசகர்கள், இளைஞர் கள். ஒன்றிரண்டு வயது வித்தியாசமே பெற்றிருந்த சமதரத்து வாலிபர்கள்.

பள்ளியின் உயர் வகுப்புகளில் படிப்பவர்கள்; படித்து விட்டு வேலை இல்லாது சும்மா இருப்பவர்கள்'; முனிசிபல் ஆபீசில் வேலை தேடிக் கொண்ட ஒருவர்இப்படியாக ஆறு பேர்கள்.

ஒருவர் கையில் பருமனான ஒரு புத்தகம் இருந்தது. அதை அன்றைக்கே படித்து முடித்து விட வேண்டும் என்ற பரபரப்பு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருந்தது.

ஆனால், ஒரே புத்தகத்தை எத்தனை பேர் ஒரே சமயத்தில் படிக்க இயலும்?

அதற்கு அவர்கள் ஒரு வழி கண்டிருந்தார்கள்.