பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


lெlசகர்கள் பலவிதம்.

எழுதப்படிக்கத் தெரிந்த எல்லோரும் பத்திரிகைகள் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுகிற வாசகர்களாக வளர்வதில்லை.

பத்திரிகைகள் புத்தகங்கள் படிப்பதில் நாட்டம் செலுத்துகிற அனைவரும் எக்காலத்தும் வாசகர்களாக இருப்பதும் இல்லை.

படிக்க வேண்டும் எனும் ஆசை - பாடப்புத்தகங்கள் தவிர இதர கதைப்புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள், பத்திரிகைகள் முதலியவற்றைப் படிக்கிற அவா. ரொம்பப் பேருக்கு சிறுவயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. பலருக்கு உயர் வகுப்புகள் படிக்கிற போது ஏற்படுகிறது.

எண்ணற்ற பேர்களுக்கு, வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிற போது அந்த நாட்டம் உண்டாகிறது. பெண்களுக்கு கல்யாணமாகாது விட்டோடு இருக்கிற காலத்தில் இந்த ஆர்வம் தீவிரமாக இருக்கிறது.