பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உத்தியோகம் கிடைத்த பிறகு அநேகர் படிப்பதில் அவ்வளவாக நாட்டம் கொள்வதில்லை. பெண்களில் பெரும் பலர் திருமணம் ஆனபிறகு, குடும்பம் பிள்ளைகள் என்றெல்லாம் ஆகி விட்டதும், படிப்பதில் ஆர்வம் இல்லாதவர்களாக மாறிப்போகிறார்கள்.

அநேகர் முதுமைக் காலத்திலும் கூட பத்திரிகை கள், புத்தகங்கள், தொடர்கதைகள் முதலியவற்றை தேடி வாங்கி உற்சாகத்தோடு படிக்கும் இயல்பினராக இருக்கிறார்கள்.

சிறுவர் சிறுமியர்க்கென்று இப்போது ஏகப்பட்ட பத்திரிகைகள், சித்திரக் கதைகள், ரசமான கதைப் புத்தகங்கள் வருகின்றன. அவற்றை சிறு வயதினர் மட்டுமல்லாது பெரியவர்களில் அநேகர் கூட ஆசையோடு

படிக்கிறார்கள்.

சிறார்க்கென்றே தோன்றிய சில பத்திரிகைகள் இளைஞர்களும் பெரியவர்களும் விரும்பிப் படிக்கும் பத்திரிகைகளாக விளங்குவதும் உண்டு.

தமிழ்வாணன் ஆசிரியராக இருந்து நடத்திய 'கல்கண்டு’ பத்திரிகை வாசகர்கள் மத்தியில் அந்த விதமான வரவேற்பைப் பெற்றிருந்தது.

முதலில் அது சிறுவர் பத்திரிகையாகத் தான் தொடங்கப்பட்டது. பிறகு, சிறு வயதினர் மட்டுமின்றி, சிறிதளவு படிப்பறிவு உள்ளவர்களும் விரும்பிப் படிக்கும் பத்திரிகையாக அது விளங்கியது. பின்னர், வயது

இ வாசகர்களும் விமர்சகர்களும் 盘蟒箕