பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகைகளில் ஆசிரியப் பொறுப்பு வகித்தவர். கிளுகிளுப்பூட்டும் கதைகளும், கிளர்ச்சியூட்டும் திகில்மர்மக் கதைகளும், பிறவும் எழுதும் திறமை பெற்றவர், ஒரு புனை பெயர் சூடிக் கொண்டு ராசிபலன் - கிரக பலன் என்று பத்திரிகைகளிலும், விசேஷ வெளியீடுகளாகவும் எழுதி வந்தார். வருட ஆரம்பத்தில், ஒவ்வொரு ராசிக்கும் வருட பலன் கணித் து, தனித் தனிப் புத்தகங்களாக பிரசுரிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டினார்.

- மற்ற விதமான கதைகள் எழுதிக் கொண்டிருப்பதை விட, ஒவ்வொரு ராசிக்கும் வருட பலன் எழுதி, தனித் தனிப் புத்தகங்களாக அச்சிட்டு, தமிழ் நாடு பூராவும் விற்பனைக்கு அனுப்பி, பண வசூல் செய்வது ரொம்பவும் லாபகரமான தொழில் என்று கண்டு கொண்டேன். கதைப் புத்தகங்கள் - துப்பறியும் மர்மக் கதைகள் கூட - அதிகமாய் போனால் இரண்டு ஆயிரம் மூவாயிரம் விற்பனையாகலாம். ஆனால், ராசி ரீதியாக வருட பலன் என்பதை ஒவ்வொரு ராசிக் காாரும் ஆவலுடன் வாங்கிப் பார்க்கிறார். இது பத்தாயிரக் கணக்கில் விலை போகிறது. ஒரு புத்தகம் ஒரு ரூபாய் என்று விலை வைத்தாலே எக்கச்சக்கமாக நமக்குப் பணம் வந்து சேர்ந்து விடும். ஏஜன்சி கமிஷன், ஊர் ஊராகப் போய் புத்தகங்களை விநியோகிப்பது, பணம் வசூல் செய்வது இவற்றுக்கெல்லாம் ஆகக்கூடிய செலவுகளை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் நமக்கு நல்ல லாபம் கிடைக்கிறது...

வாசகர்களும் விமர்சகர்களும் 104