பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


களுக்கும் வழிகாட்டியானது வரலாறு.

முதன் முதலாக, மகாகவி பாரதியார் கவிதைத் தொகுப்பை முழுமையாக ஒரு ரூபாய் விலைக்கு, பெரிய புத்தகமாகத் தயாரித்து வெளியிட்டார்: வை. கோ. அதற்குப் பிரமாத வரவேற்பு கிட்டியது.

அடுத்து, அவர் திருக்குறள் (உரையுடன்) வெளியிட்டார். மாயூரம் வேத நாயகம் பிள்ளை எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம் சுகுண சுந்தரி ஆகிய இரண்டு நாவல்களையும் ஒரே புத்தகமாகப் பிரசுரித்தார். தொடர்ந்து கம்பர்ாமாயணம் "சுந்தரகாண்ட”த்தை மலிவுப் பதிப்பாகக் கொண்டு வந்தார். அதற்கு மேல் அவர் பிரசுரத்தைத் தொடரவில்லை.

இதற்குள் தமிழில் இதர மலிவுப் பதிப்பு முயற்சிகள் அதிகரித்து விட்டன. "காதல்’ பத்திரிகை நடத்திய அரு. ராமநாதன், தனது ("பிரேமா, பிரசுரம்’ வாயிலாக சித்தர் பாடல்கள், விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன் கதைகள், கதைக்கடல் முதலியவற்றை மலிவு விலை நூல்களாக வெளியிட்டு வாசகர்களுக்கு விருந்தளித்தார்.

நடேச சாஸ்திரியின் 'திக்கற்ற இரு குழந்தைகள்' நாவலை ஒரு பதிப்பகம் மலிவுப் பதிப்பாகப் பிரசுரித்தது.

இவை எல்லாம் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று மலிவு விலையில் விற்கப்பட்டதால், வாசகர்

வாசகர்களும் விமர்சகர்களும் 109