பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ் மலிவுப் பிரசுரங்களை மக்கள் ஏன் விரும்பிப்

படிக்கிறார்கள்?

"பொழுது போக்காக என்று சொல்லலாம். அது மட்டுமல்ல. வாழ்க்கையின் வெறுமையை, சோகங்களை, கவலைகளை மறப்பதற்கு இத்தகைய எழுத்துக்கள் துணை புரிகின்றன. உண்மைகனைக் கண்டு கொள்வதிலிருந்து வழி விலகிச் செல்ல வாழ்க்கை யதார்த்தங்களிலிருந்து சிறிது நேரத்துக்காவது மனம் நழுவிப் போக-இவை உதவுகின்றன. ஒரு எஸ்கேப்பிசம்’ ஆக இக் கனவுகளும் கற்பனைகளும், போலிப்பகட்டுகளும் பொய்மைகளும் நிறைந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன.

வாழ்க்கையைப் பிரதிபலிக்காத - நம் நாட்டின் கலைத்தன்மைகளையும் கலாச்சாரங்களையும் எடுத்துக் காட்டாத, அதீதக் கற்பனைகளையும் அபுத்தக் கூத்தடிப்புகளையும் கொண்ட திரைப்படங்களையும் டி. வி. காட்சிகளையும் மக்கள் ஆவலோடு பார்ப்பதற்கும் இது தான் அடிப்படைக் காரணம்.

இவை எல்லாம் மக்களின் மனசையும் அறிவையும், சின்ன வயதிலிருந்தே. கெடுத்து வருகின்றன. சமூகத்தின் பண்பாட்டையும் சிதைத்துச் சீரழித்துக் கொண்டிருக்

வாசகர்களும் விமர்சகர்களும் f 13