பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பத்திரிகை. சோவின் எழுத்துத் திறமை துக்ளக் மாதம் இருமுறைப் பத்திரிகையை படிப்படியாக வளர்த்துள்ளது. பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் என்ற எல்லை அகண்டு பரவலாகி சில லட்சம் வாசகர்கள் எனும் பரப்பைத் தொட்டுள்ளது.

சினிமா விஷயங்களையும், சினிமா நட்சத்திரங்கள் பற்றிய கிசுகிசுக்களையும் சுவையாகத் தந்தால் மட்டுமே எண்ணிக்கை உயரும் என்கிற பத்திரிகை உலக நம்பிக்கை பொய்த்துப் போகும்படி செய்த பெருமை சோ-ராமசாமிக்கு உண்டு.

சிறிது காலம் துக்ளக் பத்திரிகை சினிமாப் பட விமர்சனங்களை, தனக்கென அமைத்துக் கொண்ட தனிப் பாணியில், வெளியிட்டுக் கொண்டிருந்தது. அந்த அந்தப் படத்தின் டைரக்டர் (இயக்குநர்) பதிலையும் வாங்கிப் பிரசுரித்து வந்தது.

பின்னர் அந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டது. அரசியல், சமூக விவகாரங்களிலேயே தன் கவனத்தைச் செலுத்துகிறது. நாட்டின் பல்வேறு துறைகளிலும் நிலவுகிற ஊழல்களை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறது.

'இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம்’ என்று சொல்லப் படுகிற எழுத்து முறையை (பத்திரிகைத் தன்மையை) துக்ளக் வெற்றிகரமாக வளர்த்து விட்டிருக்கிறது.

வாசகர்கள் இந்த ரகப் பத்திரிகைப் போக்கை

வரவேற்கிறார்கள் என்பதற்கு துக்ளக் கைப் பின்பற்றி,

வாசகர்களும் விமர்சகர்களும் 3.15