பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உண்மை அறிந்து விவரிக்கிற எழுத்துக்களையும் தயாரித்து அனுப்புவதற்கு இளைஞர்களையும் மாணவ மாணவிகளையும் சில பத்திரிகைகள் பயிற்றுவிக்கின்றன.

இதே ரீதியில் சினிமா வட்டாரங்களில் சுற்றியும், ஸ்டுடியோக்களில் அலைந்து திரிந்தும், சினிமாத்துறை யினரை சந்தித்துப் பேசியும், சினிமா உலக உண்மை களையும் வம்புகளையும் சேகரம் செய்து சுவாரஸ்யமாக வெளியிடுவதன் மூலம் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதிலும் பத் தி ரி ைக க ள் கருத்தாக இருக்கின்றன.

சினிமா சஞ்சிகைகள் மட்டுமின்றி, ஜனரஞ்சகப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்கிற வணிக நோக்குப் பத்திரிகைகளும் இவ்வியாபார நுணுக்கங்களைத் திறமையாகக் கையாள்கின்றன. தி ன த் த ன் க ள் அனைத்தும், வாரம் தோறும் குறித்த ஒரு நாளில், இந்த விதமான சினிமா உலகச் செய்திகளுக்காக, பக்கங்களை தாராளமாகவே ஒதுக்குகின்றன.

சாதாரண வாசகர்கள் இவற்றை எல்லாம் ரசித்து மகிழத் தவறுவதில்லை.

சாதாரண வாசகர்கள் ஏமாறத் தயாராக இருக்கிறார்கள். எனவே பத்திரிகைகள் அவர்களை ஏமாற்றத் தயங்குவதில்லை,

சினிமா நடிகைகள் நடிகர்கள் பேரில் மக்களுக்கு ஒரு மோகம் இருக்கிறது. அதை பத்திரிகைக்காரர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வாசகர்களும் விமர்சகர்களும் 117