பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதே போன்று தான், பெண்கள் பெயரில் எழுதப்படுகிற எழுத்துக்களில் அநேகம் பெண்களால் எழுதப்படுவதில்லை என்கிற உண்மையும்.

பத்திரிகைகளில் பணிபுரிகிற ஆசியர்கள், துணை ஆசிரியர்கள் - பொதுவாக ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு, வாசகர்கள் பெண்கள் பெயர்களைப் பார்த்தாலே ஒருவிதக் கிறக்கம் கொண்டு விடுவார்கள் எனும் நினைப்பு இருக்கிறது. அவர்களே பெண்கள் பெயரில் கதைகள் எழுதுவதோடு, பெண்கள் பெயரில் எழுதப்பட்டு வருகிற கதைகளுக்கு விசேஷ கவனிப்பு அளிக்கிறார்கள்.

இதனால், பத்திரிகைகளில் சுலபமாக இடம் பெற ஆசைப்படுகிற எழுத்தாளர்களில் சிலர் பெண் பெயரைச் சூடிக்கொண்டு எழுதத் தொடங்குகிறார்கள். வெற்றியும் பெற்று விடுகிறார்கள்.

சிறிது காலம் எழுதிய பிறகு, பெயரும் புகழும் எவளோ ஒரு பெண்ணுக்கு - அந்தப் பெண் கதை எழுதுகிறவரின் மனைவியாகவே இருந்த போதிலும்போய் சேருவதை அந்த எழுத்தாளராலேயே சகித்துக் கொள்ள முடியாமல் போகிறது. 'உண்மையில் எழுதுவது நான் தான்’ என்று விளம்பரப்படுத்திக் கொள்ளத் தவிக்கிறார் அவர்.

பத்திரிகை ஆசிரியரும் பெயர் பெற்று விடுகிற பெண்ணின் பேரிலேயே கதையைப் பிரசுரித்து, அவரை அறிமுகம் செய்யும் வகையில் ஆணின் படத்தை அச்சிட்டு

வைக்கிறார்.

வாசகர்களும் விமர்சகர்களும் } | {}