பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


படிக்கிறவர்கள் (வாசகர்கள்) பற்றி என் நண்பர் ஒருவர் விரிவாகச் சொன்ன கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும்:

- பொதுவாக இப்போதெல்லாம் புத்தகங்கள் படிக்கிறவர்கள் அதிகமாக இல்லை. புத்தகங்களை - புதுசோ பழசோ - தேடி எடுத்துப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உடையவர்கள் குறைவாகத் தான் இருக்கிறார்கள். அவர்களிலும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படிக்கிறவர்கள் ரொம்பவும் குறைவு.

-ல் படிக்கும் பழக்கம் உடையவர்களில் மிக அதிகமான, பேர் பொழுது போக்கிற்காகத் தான் படிக்கி நார்கள். இவர்களுக்கு, புத்தகம் என்று ஏதாவது இருந்தால் போதும். நல்ல விஷயங்களைக் கொண்ட தரமான படைப்பு நூல் தான் தேவை என்ற கட்டாயம் எதுவும் இல்லை. சிரமப்படுத்தாத - சிந்தனைக்கு வேலை கொடுக்காத - பத்திரிகைகளே போதும். கதைப் புத்தகம் என்றால், சரளமான நடையில் கதை சொல்கிற,