பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பவப் பின்னல்களைக் கொண்ட, கிளர்ச்சி ஏற்படுத்துகிற கதைகளாக இருக்க வேண்டும். அதனால் தான் கொலை, கொள்ளை, மர்மம், காமம், துப்பறிதல் எல்லாம் உடைய த்ரில்லர்கள் மிகப் பலரால் விரும்பப்படுகின்றன.

- பொழுது போக்கிற்காகப் படிக்கிறவர்கள் கூட, ஒரு காலகட்டத்துக்குப் பிறகு படிப்பதிலும் சோம்பல் கொள்கிறார்கள். யாரோடாவது பேசி வம்பளந்து பொழுது போக்குவது இவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் ஆகி விடுகிறது. மணிக்கணக்கில், பொருள் இருக்கிறதோ இல்லையோ, எதைப் பற்றியாவது பேசிக் கொண்டிருப்பதில் அளவற்ற சந்தோஷம் அடைகிறார்கள்.

- இந்த ரகத்தினர் பல்குக்கு இப்போது வரப்பிரசாதம் போல் டெலிவிஷன் கிடைத்திருக்கிறது. டி. வி. யில் காட்டப்படுவது நல்ல நிகழ்ச்சியோ இல்லையோ - தரமானதோ அபத்தக்களஞ்சியமோ - எதுவாக இருந்தாலும் சரியே. செவனேன்னு (சிவனே என்று உட்கார்ந்து, அல்லது ஈசிச் சேரில் சாய்ந்தபடி, நாள் பூராவும் பார்த்துக் கொண்டிருப்பதில் இவர்களுக்கு ரொம்ப திருப்தி. பத்திரிகை அல்லது புத்தகத்தைக் கையில் பிடித்து, கண்களை ஓடவிட்டு, கவனம் செலுத்தி வாசிக்க வேண்டிய சிரமம் டி. வி. பார்ப்பதில் இல்லையே! ஆகவே, சோம்பல் உபர்சகச் சுகவாசிகளுக்கு டி. வி. முன் உட்கார்ந்திருப்பது சுகமான அனுபவம் ஆகிவிட்டது. கலர் டி. வி. என்றாலோ, ஆகா, அதன் சுகம், அதன் இனிமை, அது தருகிற சந்தோஷம் எல்லாமே தனி டி.வி. யின் சர்வ வியாபகம் மக்களின் படிக்கிற இயல்பையும்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 122