பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதைத்து விட்டது. படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து

வருவதற்கு டி. வி. யின் வளர்ச்சியும் ஒரு காரணம் தான்.

இன்னொரு நண்பர், வேறொரு சமயம், ஜனங்களின் படிக்கிற ஆர்வம் பற்றி - அல்லது படிக்கர்ல் இருக்கிற (படிக்க விரும்பாத) இயல்பு குறித்து-"தனது அபிப்பிராயத்தைச் சொன்னார்:

- ரொம்பப் பேர் இலக்கியப் புத்தகங்கன்ை, இலக்கியப் பத்திரிகைகளை, விரும்பிப் படிக்கவில்லை என்பது உண்மை ஆனால் அதற்காக அவர்கனைக் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை. மக்களின் வாழ்க்கை நிலை, இன்றைய சமூக நிலைமை, அப்படி இருக்கிறது. அவர்கள் வயிற்றுப்பாட்டுக்காக, வாழ்க்கைச் செலவுகணை ஒட்டுவதற்காக ஏதாவது வேலை பார்த்தாக வேண்டி இருக்கிறது. கிடைக்கிற வருமானம் செலவுகளுக்கும் போதுமானதாக இல்லை. எனவே, அன்றாடம் வீட்டில் பல சிக்கல்கள். வாழ்க்கைப் பிரச்னையே பெரும் பிரச்னையாக இருக்கிற பேதது, அமைதியாக, உட்கார்த்து, ஆழ்ந்த விஷயங்களைப் படிப்பதில் ஆர்வம், எப்படி உண்டாகும்?

- ஆபீஸ்களில், தனியார் நிறுவனங்களில், பாங்குகளில், இப்படி எங்கெங்க்ே வேலை பார்க்கிறவர் களுக்கு நேரம் நிறையவே இருக்கும் எனத் தோன்றலாம். ஆனால் அவர்களுக்கும் எவ்வணுவே சிக்கல்கள். காலையில் எழுந்து, தினசரி அலுவல்களைக் கவனித்து, ஆபீசுக்குப் புறப்படுவது வரை ஏகப்பட்ட டென்ஷன். ஆபீசுக்கு

இ வாசகர்களும் விமர்சகர்களும் 1.23