பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தால், அங்குள்ள வேலைகள், பிரச்னைகள், கவலைகள். எட்டு மணி நேரம் உழைத்து விட்டு வீட்டுக்கு வருவது எளிய, காரியமாக இல்லை. பஸ்சுக்காகக் காத்திருப்பது, பஸ்சில் நெருக்கடி அனுபவிப்பது. எலெக்ட்ரிக் ரயிலில் திணறுவது, என்றும் எங்கும் எப்போதும் கும்பல் - நெருக்கடி - வசதிக் குறைச் சல்கள். எல்லாம் எரிச்சல் தருவதாகத் தான் இருக்கிறது. வீட்டுக்கு வந்து ஓய்வாக இருக்கலாம் என்று எண்ணி வருகிறவர்களுக்கு அங்கே வேறு ரகமான சிக்கல்கள், குழப்பங்கள், டென்ஷன். அமைதி கிடைக்க வழி

- இந்த நிலையில் புத்தகம் படிக்கவா மனம் இருக்கும்? இருப்பதைச் சாப்பிட்டு விட்டு, ஹாயாகச் சர்வ்ந்து கிடக்கலாம் என்று தான் தோன்றும். படிக்க வில்லையே, ஏதாவது படிக்கலாமே என்ற மன அரிப்பைத் திருப்திப்படுத்துவதற்காக எதையாவது எடுத்துப் புரட்டுகிறார்கள். ஜனரஞ்சகப் பத்திரிகைகள் தான் அவர்களுக்குக் கைகொடுக்கின்றன. உழைத்து அலுத்து ஓய்வு நாடிச் சாய்ந்திருப்பவர்களுக்கு லைட் ரீடிங் தான் பிடிக்கும். nரியஸ் லிட்டரேச்சக் பக்கம் அவர்கள் மனம் திரும்ப முடியாது.

வேெறாரு நண்பர். பேச்சோடு பேக்சாகக் குறிப்பிட்டது இது:

- படிப்பது என்ப்து ரொம்புப் பேருக்கு சிரமமான விஷயம். தான். சிரமப்படுத்துகிற காசியம் கூட. தனிமையில் இருந்து, புத்தகத்தை எடுத்து, கவனம்

இ வாசகர்களும் விமர்சகர்களும் £24