பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிந்தனைக்கு வேல்ை கொடுக்கிற, ஆய்வு ரீதியான, சோதனை அடிப்படையில் அமைகிற, தரத்தில் வெகுவாக உயர்ந்த படைப்புகள் அதிகமான வரவேற்பு பெறுவது இல்லை. இத்தன்மையான ஆக்கங்களை வரவேற்று, ஆதரித்து, ரசித்துப் பாராட்டி மகிழ்கிறவர்களின் எண்ணிக்கை மசாலாத்தனப் படைப்புப் பிரியர்களின் தொகையை விடக் குறைவாகத் தான் இருக்கும் - இருக்கிறது. -

ஆனால், தமிழ் நாட்டில் இந்த வித்தியாசம் பயங்கரமான அளவில் - வேதனையும் வகுத்தமும் தரக்கூடிய அளவில் இருக்கிறது. இது, பெரிய குறை.

மசாலாத்தனப் பத்திரிகைகள் வாசக் தோறும் பல லட்சம் பிரதிகள் விலை போகின்றன. மாத நாவல்கள். க்ரைம் ஸ்டோரீஸ் - பாக்கெட்புக்ஸ்:ன்று சொல்லப்படுகிற கிளுகிளுப்பு, செக்ஸ், வன்முறை. மர்ம சமாச்சாரங்களை விறுவிறுப்பான விதத்தில் கூறுகிற - வெளியீடுகளும், லட்சக்கணக்கில் இல்லா விட்டாலும், பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

நாவல்கள். சிறுகதைத் தொகுப்புகள் வேகமாக விற்பனையாவதில்லை என்று புத்தக வெளியீட்டாளர்கள் சொல்கிறார்கள், ஆனாலும், மசாலாப் பத்திரிகைகளில் தொடர்கதைகளாக வந்த மசாலாத்தன எழுத்துக்கள் உடனடியாகப்புத்தகங்களாக உருவாக்கப்பட்டிதும், அதிக விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பினும், நல்ல விற்பனையைப் பெறத்தான் செய்கின்றன.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 127