பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அக்கறை செலுத்தி (சிரத்தையும் சிரமமும் ஈடுபடுத்தி) படிக்க வேண்டிய கனமான, ஆழ்ந்த, சிந்தனைக்கு வேலை வைக்கக் கூடிய புத்தகங்கள் விலை போவதில்லை. அப்படி எழுதப்படுகிற படைப்புகள் (கதைகள், நாவல்கள், கவிதைகள்) புரியவில்லை என்று சுலபத்தில் ஒதுக்கப்பட்டு விடுகின்றன.

இங்கே பணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கக் கூடியவர்கள் மிகவும் குறைவு. சினிமாவுக்கு அஞ்சும் பத்தும் (ரூபாய் தான்) அலட்சியமாகக் கொடுக்கிறவர்கள், ஒட்டல்களில் தங்களுக்காகவும் நண்பர்களுக்கென்றும் பணத்தை "தாராளாேய் செலவு பண்ணுகிறவர்கள். குளிர் பானங்களுக்காக போட்டில்ட் ட்ரிங்க்ஸ்') நோட்டு நோட்டாக எடுத்து நீட்டுகிறவர்கள் கூட, புத்தகங்கள்

ra Gaರ್ಿ€ 5 prಸು , ಹಲಸುಅpr### கூசுகிறார்கள். பணம் இல்லையே என்று பின்வாங்கு

கிறார்கள். இது பரிதாபத்துக்கு உரியதே.

இன்னொரு உண்மை. கல்லூரிகளில் பணி புரிகிற பேராசிரியர்கள், மேல் நிலைப் பள்ளிகளின் ஆசிரியர் களில் அதிகம் பேர்-புத்தகங்களுக்காகப் பணம் ೧Fಖ பண்ணக் கூடிய நிலையில் இருப்பவர்கள். பாட நூல்கள் தவிர்ந்த பொதுவான் புத்தகங்களை வாங்குவதேயில்லை. படிப்பதில் ஆர்வம் கொள்ளுவதுமில்லை.

நல்ல, தரமான, புத்தகங்கள் பற்றிப் பேராசிரியர் களும் மற்றவர்களும் மாணவர்களுக்கு எடுத்துக் கூற

வாசகர்களும் விமர்சகர்களும் 128