பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


| 0

த்ரமான வாசகர்கள் யார்? அவர்கள் எப்படி

உருவாகிறார்கள்?

படிப்பு அனுபவம் பெற்றவர்கள், ரசனைத் தேர்ச்சி உடையவர்கள், மன முதிர்ச்சி கொண்டவர்கள், ஆழ்ந்த படைப்புகளையும் மேலோட்டமான எழுத்துக் களையும் இனம் கண்டு கொள்ளக் கூடியவர்கள், இன்ன பிற இயல்புகள் பெற்றிருப்பவர்கள் தரமான

வாசகர்கள் ஆவர்.

இவர்களும் சாதாரண வாசகர்களாக இருந்து வளர்ச்சி பெறுகிறவர்கள் தான்.

ஆரம்ப நாட்களில் அனைத்து வாசகர்களும் எல்லா விதமான எழுத்துக்களையும் படிப்பதில் விருப்பம் கொண்டவர்களாகத் தான் இருப்பர். பார்வையில் படுகிற பத்திரிகைகளை எல்லாம், கிடைக்கிற புத்தகங்கள் பலவற்றையும் படிப்பதில் ஆர்வம் உடையவர்களாகத்

தான் இருப்பார்கள்.