பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இப்படி படிக்கப் படிக்க வாசகர்களுக்கு கால ஒட்டத்தில் ஒரு முதிர்ச்சி ஏற்படுகிறது. எழுத்துக்களின் தன்மைகளையும் தராதரங்களையும் கண்டு உணரக் கூடிய ரசனைத் திறம் உண்டாகிறது. இவை படிக்கக் கூடியவை, இவற்றைப் படிப்பது வீண் வேலை கால நஷ்டம் எனப் புரிந்து கொள்ளும் தேர்ச்சி பிதந்து விடுகிறது.

இந்த முதிர்ச்சியும் ரசனை வளர்ச்சியும், தரம் உணரும் தேர்ச்சியும் சில பேருக்கு சீக்கிரம் கிட்டி விடுகின்றன. அநேகருக்கு நாளாவட்டத்தில் - நீண்ட காலத்தில் - கிடைக்கின்றன. பலருக்கு என்றுமே ஏற்படாமலும் போகிறது. இது அவரவர் மனப்பக்குவம், அறிவு நிலை, ருசி பேதம் முதலியவற்றைப் பொறுத்து அமையும்.

ரசனை வளர்ச்சிக்கும் தேர்ச்சிக்கும் இதர வாசக ரசிகர்களது அபிப்பிராயங்கள் துணை புரியக் கூடும். ரசிக நண்பர்களது உரையாடல்களும் யோசனைகளும் உதவக் கூடும். படித்தவர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்கு கள், கலந்துரையாடல்கள், பு த் த க ங் க. ைள மதிப்பிட்டுரைக்கும் கட்டுரைகள், நல்ல விமர்சகர்களின் நேர்மையான அபிப்பிராயங்கள் எல்லாம் வாசகர்களின்

தரம் உயர்வதற்கு வகை செய்யக் கூடும்,

படிக்கிற எல்லோருமே தமக்கெனத் தனி அபிப்பிராயம் வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்று இருப்பதில்லை.

வாசகர்களும் விமர்சகர்களும் 131