பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமக்கெனத் தனி அபிப்பிராயம் கொள்ளக் கூடியகொள்கிற - எல்லோருமே தங்கள் கருத்துக்களை வெளிப் படுத்தும் திறமை பெற்றிருப்பதில்லை. தங்கள் கருத்துக் களை வெளிப்படையாகக் கூறத் துணிவதுமில்லை.

தங்களது அபிப்பிராயங்களை - சிந்தனைகளை, எண்ணங்களை, விருப்பு வெறுப்புகளை - தயக்கம் இல்லாமல் பேச்சில் வெளிப்படுத்துகிறவர்கள் பலர் இருக்கலாம். இத்தகைய அபிப்பிராயக்காரர்களில் ஒரு சிலர் தான் தங்கள் கருத்துக்களை எழுத்தில் வெளியிட முன் வருகிறார்கள்.

இவர்களில் அநேகர் ஆசிரியருக்குக் கடிதங்கள்’ எழுதுவதோடு நின்று விடுகிறார்கள். சிலர் தான் தங்கள் எண்ணங்களை முறைப்படுத்தி, காரண காரியங்களோடு விளக்கிக் கட்டுரையாக எழுத முற்படுகிறார்கள்.

இவர்கள் மத் தி யி ல் தான் விமர்சகர்கள் தலையெடுக்கிறார்கள்.

வாசகர்களில் பலப்பலருக்கு எழுத்தாளராக

விளங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆயினும் எல்லோரும் எழுத்தாளர்கள் ஆக வளர்ச்சி பெற்றுவிட இயல்வதில்லை.

அதே போல, படிக்கிறவர்களும் எழுதுகிறவர்களும் தாங்கள் படித்தவற்றைப் பற்றி தங்களுக்குத் தோன்றிய எண்ணங்களைச் சொல்ல ஆசைப்படுகிறார்கள். ஆயினும், அவர்கள் அனைவரும் விமர்சகர்கள் ஆகிவிடுவதில்லை.

வாசகர்களும் விமர்சகர்களும் 132