பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலத்தில், ஆங்கிலக் கல்வி முறையும் உலக இலக்கியப் பயிற்சியும் ஏற்பட்ட பிறகு, அபூர்வமாக ஒரு சில இலக்கிய விமர்சன முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது உண்டு. ஆனால், அவை போதிய கவனிப்பைப் பெறவில்லை.

தமிழ் இலக்கிய ஈடுபாடும், உலக இலக்கியங்களின் பரிச்சயமும் கொண்ட ஒரு சிலர். தமிழ் காவியங்களை உலகப் பெரும் காவியங்களுடன் ஒப்பிட்டு, தமிழ் காவியங்களின் சிறப்பையும் பெருமையையும் உணர்ந்து ரசிக்க முடிந்தது. அவர்களில் ஒன்றிருவர் தாங்கள் ரசித்து வியந்தவ்ற்றைக் கட்டுரைகளாக எழுதவும் துணிந்தார்கள்.

கம்பனின் ராமகாவியம் உலகப் பேரிலக்கியங்கள் பலவற்றினும் மிகச் சிறந்தது ஆகும் என உணர்ந்தார் வ. வே. சுப்பிரமணிய அய்யர். அந்த உண்மையை உலகுக்கு உணர்த்துவதற்காக விமர்சன ரீதியில் விரிவாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார் அவர். இது நிகழ்ந்தது 1920 களில்.

வ. வே. சு. அய்யர் வேறு சில விமர்சனக் கட்டுரைகளும் எழுதினார். அவை அனைத்தும் ரசனை அடிப்படையில் எழுதப்பட்டவை. எனவே, அவருடைய விமர்சன முறை ரசனா பூர்வ இலக்கிய விமர்சனம் என

அறியப்படலாயிற்று.

தற்கால இலக்கியத்தில், தமிழ் சிறுகதைக்கு இலக்கிய வடிவம் தந்து, சோதனை ரீதியில் நவீனமான

இ வாசகர்களும் விமர்சகர்களும் 1.37