பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எல்லாமே பிற மொழிக் கதைகளின் தழுவல்கள் என்று கூறிவிட்டு முடிவுரையாக இந்த ரீதியில் எழுதி வைத்தார்:

கல்கியின் கதைகள் எல்லாம் வெந்நீர் அடுப்பில் போட்டு எரிக்கத் தான் லாயக்கு. அப்படி எரித்து வெந்நீர் போட்டு அவர் குளித்தால், மனசாறச் செய்த பாபங்கள் போகாவிட்டாலும், அவர் உடம்பில் உள்ள அழுக்காவது போகும்.

பிறகு, ஏ. எஸ். ஏ. சாமி எழுதிய 'யில்கனன்’ நாடக நூலுக்கு விமர்சனம் எழுதிய புதுமைப் பித்தன் அதை "இரவல் விசிறி மடிப்பு’ என உருவகப்படுத்தினார். சொந்தச் சரக்கு இல்லாது, பெருமைக்காக விசிறி மடிப்பு அங்கவஸ்திரத்தை இரவலாகப் பெற்றுப் பகட்டுகிறவர்களைப் போலவே தான், அந்த நாடக ஆசிரியரும் இரவல் விஷயங்களை வைத்து சொந்தச் சரக்கென்று பெயர் பண்ணுகிறார் என்று விரிவாக எழுதினார்.

இதெல்லாம் படைப்பை ஒதுக்கி விட்டு படைப் பாளியைத் தாக்குகிற தடலடித்தனமே தவிர, ஆரோக்கியமான வி ம. ர் ச ன ம் ஆகாது. இப்படி எழுதுகிறவரின் துணிச்சலை வாசகர்கள் வியந்து ரசிக்கக் கூடும்.

இந்தப் போக்கு தமிழில் அவ்வப்போது தலை காட்டி வருகிறது.

1960 - 70 களில் விமர்சனத்தில் ஈடுபட்டிருத்த

கு வாசகர்களும் விமர்சகர்களும் 141