பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெங்கட்சாமிநாதனிடமும் இந்தத் தன்மை காணப்பட்டது. ஆராய்ச்சி அறிஞர் நா. வானமாமலை பற்றி, இவர் பாளையங்கோட்டை சிறை அருகில் உள்ள பனை மரத்திலேறி நுங்கு பறிக்கத் தான் லாயக்கு. இவருக்கும் ஆராய்ச்சிக்கும் வெகு தூரம்' என்றும், இந்தக் கவிதைப் புத்தகம் கையால் தொடக்கூட அருகதையற்றது இரண்டு விரல்களால் தூக்கி எடுத்து அப்படியே ஜன்னலுக்கு வெளியே வீசி எறியப்பட வேண்டும்’ என்ற ரீதியிலும் அவர் விமர்சித்த போக்கை நினைவு கூரலாம்.

1944 - வாக்கில் மு. அருணாசலம் எம். ஏ. ஒரு விமர்சன நூல் எழுதினார். இன்றைய தமிழ் வசன நடை என்பது அதன் பெயர். இலக்கிய மறுமலர்ச்சி யையும், மறுமலர்ச்சி எழுத்தாளர்களையும் அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் மறுமலர்ச்சிச் சிறுகதைகளையும், மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் தமிழ் நடையையும் விமர்சனம் என்ற பெயரில் ஏகமாகப் பரிகசித்தும் குறை கூறியும் எழுதியிருந்தார் அந்தப் புத்தகத்தில். அவருடைய அபிப்பிராயத்தின்படி, ஐந்தே ஐந்து பேர்கள் தான் தமிழ் நாட்டில் அழகான வசன நடை எழுதியவர்கள். திரு. வி. கலியாண சுந்தர முதலியார், ட க்ட ர் உ. வே. சாமிநாத ஐயர், டி. கே. சிதம்பரநாத முதலியார், ச க் கி , வ ர் த் தி ராஜகோபாலாச்சாரியார் "கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரே அவர்கள்.

இந்தப் புத்தகத்துக்கு பலத்த எதிர்ப்பு உண்டாயிற்று தமிழ் நாட்டில். விரிவான கட்டுரைகளும், தாக்குதல்களும், வசைக் கவிதைகளும் எழுதப்பட்டன்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 142