பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்தாளர்களையும் கரித்துப் பேசுவதில் இன்பம் கண்டார்கள்.

"மறுமலர்ச்சி என்பதே சரியல்ல. மறுமலர்ச்சியே கிடையாது. ஒரு முறை மலர்ந்ததி வாடும், கருகும், மாளும். வாடியது, மாண்டது மீண்டும் மலர்வதில்லை. மறுமலர்ச்சி என்பது இல்லாத ஒன்றைக் கற்பித்துக் கூறுவதேயாகும். ஆகாயத் தாமரை என்பது போல, துலச்சி இல்லை; மாள்ச்சி தான் உண்டு. மறுமலர்ச்சி என்று சொல்லிக் கொண்டு எழுதுகிறவர்கள் மொழிக்கு மாள்ச்சி உண்டு பண்ணுகிறார்கள். மொழிய்ைச் சாகடிக்கிறார்கள் என்று ரா. பி, சேதுப்பிள்ளை

ஆவேசமாகப் பேசுவது வழக்கம்.

வ. ரா. வும் அவர் வழி வந்தவர்களும் பண்டிதர் களையும் பண்டிதப் போக்கையும் குறை கூறிப் பேசுவதும் எழுதுவதும் சகஜமாக இருந்தது. அவர்கள், 'திருக்குறள் இலக்கியம் இல்லை' தமிழில் புதிதாகப் படைத்து மொழியை வளம் செய்வதற்கு சங்க கால இலக்கியங் களையும் பிறவற்றையும் படிக்க வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை என்று சொன்னார்கள்.

இருசாராரும் விமர்சன ரீதியில் ஆய்ந்து கூறுவதில் முனைப்பு கொண்டாரில்லை.

பண்டிதர்களைக் காய்வதிலும் பரிகசிப்பதிலும் முன்னணியில் இரு ந் த வ ர் களி ல் “ rຫຼົs tp of.” டி, கே. சிதம்பரநாத முதலியாரும் ஒருவர்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 1 44