பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரைப் போல் பல ரசிகமணிகள் தேவை, தமிழ மக்களுக்கு உண்மையான படைப்புகளைச் சுட்டிக் காட்டவும், அவற்றின் பெருமைகளை எடுத்துச் சொல்லவும், அதன் மூலம் இலக்கிய உணர்வைப் பரப்பு வதற்கும் தான்.

1940 களில் தொ. மு. சி. ரகுநாதன் இலக்கிய விமர்சனம் என்றொரு புத்தகம் எழுதி, வெளியிட்டார். பொதுவாக விமர்சனம் குறித்த கருத்துக்களும், தமிழில் அப்போது எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் சிலரது கதைகள் பற்றிய அபிப்பிராயங்களும் அந்த விமர்சன நூலில் இடம் பெற்றிருந்தன. ஒரு இளைய எழுத்தாளரின் விமர்சன எண்ணங்களை வெளிப்படையாக கூறும் புத்தகமாக அது அமைந்திருந்தது.

சுப. தாராயணன் என்ற எழுத்தாளர் (இவள் சிறிது காலம் சக்தி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்) கலை, கவிதை, விமர்சனம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். கலை, கவிதை, விமர்சனம் குறித்த பொதுப்படையான, ஆனால் ஆழ்ந்த, கருத்துக் களைக் கூறும் கட்டுரைகள் அதில் இருந்தனவே தவிர, அதுவரை தமிழில் வெளி வந்திருந்த படைப்புக்களைப் பற்றிய விமர்சனம் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை.

1950 களில் "சுதேசமித்திரன் வாரப் பதிப்பு' இலக்கிய விமர்சனத்துக்கு வழி அமைத்துக் கொடுத்தது.

சிறிது காலம் அந்த வாரப் பத்திரிகை ஆழ்ந்த இலக்கியத்தில் அக்கறை காட்டியது. தரமான

இ வாசகர்களும் விமர்சகர்களும் 147