பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுசதைகள், கவிதைகள், இலக்கியப் பிரச்னைகள் சம்பந்தமான கட்டுரைகளைப் பிரசுரித்தது, வருடம் தோறும் தீபாவளி மலர் என்று இலக்கியத் தரமான மலர் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது.

அம்மலர்களில் க. நா. சுப்ரமண்யம் இலக்கிய விசாரம் என்று இலக்கியம் சம்பந்தமாய் தனது கருத்துக் களை எழுதி வந்தார். புத்தகங்கள் பற்றியும் வாரப் பத்திரிகையில் அவர் கட்டுரைகள் எழுதினார்.

சிறுகதை பற்றிய சர்ச்சைக்கு உரிய கட்டுரை களை சுதேசமித்திரன் வாரப்பதிப்பு பிரசுரம் செய்தது. க. நா. சுப்ரமண்யமும், சி. சு. செல்லப்பாவும் சிறுகதை சம்பந்தமாகக் கூறிய கருத்துக்கள் கண்டனங்களையும்

விவாதங்களையும் கிளப்பின.

தமிழ் சிறுகதை 1940 களுக்கு பிறகு வளரவில்லை; மணிக்கொடி எழுத்தாளர்கள் இலக்கியத் தரமான கதை களை எழுதினார்கள். அவர்களுக்குப் பிறகு சிறுகதை ஒரு தேக்க நிலையை அடைந்து விட்டது; பின்வந்த எழுத்தாளர்களில் எவரும் சிறுகதை இலக்கியம் வளர்வதற்கு உதவவில்லை என்று அவர்கள் இருவரும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

அது சரியான விமர்சனம் இல்லை : குறுகிய நோக்கு

தான் என்று வேறு சிலர் மறுப்புக் கட்டுரை எழுதினார்கள்.

பிறகு, நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சி. சு. செல்லப்பாவும், இன்னும் ஒன்றிரண்டு பேரும்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 148