பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கட்டுரைகள் எழுதினார்கள். சு. மி. வாரப் பதிப்பின்

விமர்சனப் பணி அத்துடன் நின்று விட்டது,

ஆனால், விமர்சனக் குரல்கள் அங்கங்கே எழத் தொடங்கின. சிறுகதையின் தேக்கம் பற்றி க. நா.சு, வும் சி. சு. செல்லப்பாவும், சந்தர்ப்பம் கி ைட க் கிற போதெல்லாம், திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார்கள். அகிலன் போன்றவர்கள் அவர்களை எதிர்த்து மறுப்புக் குரல் கொடுத்தார்கள்.

என்றாலும், தமிழ் சிறுகதையின் வளர்ச்சி பற்றிய முறையான விமர்சனம் - பெயர் பெற்றிருந்த (சாதனை கள் புரிந்ததாகக் கருதப்பட்ட) சிறுகதை எழுத்தாளர் களின் படைப்புகளை விமர்சன ரீதியில் ஆய்வு செய்யும் முயற்சி எதுவும், எவராலும் மேற்கொள்ளப்பட்ட தில்லை.

புதுமைப் பித்தன் தலைசிறந்த சிறு க ைத ப் படைப்பாளி; புதுமைப் பித்தன் கதைகள் மாபெரும் இலக்கிய சிருஷ்டிகள் என்றொரு கருத்தும் நிலவி வந்தது.

புதுமைப்பித்தன், க. நா. சுப்ரமண்யம், சி. சு. செல்லப்பா, ம்ற்றும் மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் "சுத்த இலக்கிய வாதிகள்’. அதாவது,

இலக்கியம் படித்து ரசித்து மகிழ்வதற்காகத் தான்; படைப்பாளிகளின் ஆற்றலை எடுத்துக் காட்டுவதற்காகத் தான் எழுத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தவிர இலக்கியத்துக்கு வேறு நோக்கம் - உள்ள

இ. வாசகர்களும் விமர்சகர்களும் 149