பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுள்ளதற்கான நிலைமைகளை, சமூக - பொருளாதாரச் சீர்கேடுகளை எல்லாம் யதார்த்தமாகச் சித்திரிப்பதோடு, வஞ்சிக்கப்பட்டிருப்பவர்களும் சுரண்டப்படுவோரும் வாழ்க்கையில் எ தி ர் த் து ப் போராடுவதற்கான நம்பிக்கையையும் இலக்கியம் அவர்களுக்கு அளித்தாக வேண்டும். இது முற்போக்கு இலக்கிய நோக்கு ஆகும்.

இந்த நம்பிக்கையும் போராட்ட உணர்வும் அரசியல் தத்துவச் சார்போடு தான் ஏற்பட முடியும்; மார்க்சீய தத்துவமும், அதன் வழியில் செயலாற்றுகிற பொது உடைமைக் கட்சியும் தான் மக்களுக்கு வெற்றி பெற்றுத் தர இயலும் என்பதை வலியுறுத்துவதும் முற்போக்கு இலக்கியக் கொள்கை ஆகும்.

இந்தியாவில் வங்காளம், ஆந்திரம், கேரளம் ஆகிய பிரதேசங்களில் 1930 களிலேயே இந்த இலக்கியக் கொள்கை பலத்த செல்வாக்கு பெற்று விட்டது. தமிழ் நாட்டில் 1940 களில் தான் அடி எடுத்து வைத்து, மெதுமெதுவாக வளரத் தொடங்கியது.

1947 க்குப் பிறகு - அதாவது, இந்தியா அரசியல் விடுதலை பெற்ற பின்னர் - தமிழ் நாட்டிலும் முற்போக்கு இலக்கிய நோக்கு வேகமாக ஆதரவு பெறலாயிற்று. இந்த இலக்கியப் போக்கை ஆதரிப்பதற்கென்றே அவ்வப்போது பத்திரிகைகளும் தோன்றின.

அவற்றில், வ. விஜயபாஸ்கரன் ஆசிரியராக

இருந்து நடத்திய சரஸ்வதி’யும் ஒன்று. அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருந்த போதிலும், அவருடைய

இ வாசகர்களும் விமர்சகர்களும் 1 5 i