பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கட்டுரைகளை எழுத்து வெளியிட்டது. அவற்றில் பலவற்றை சி. கனகசபாபதி எழுதினார்.

எழுத் து' மூலம் வெங்கட்சாமிநாதனும் தருமுசிவராமுவும் நம்பிக்கைக்குரிய விமர்சகர்களாக அறிமுகமானார்கள்.

இக்காலகட்டத்தில் தாமரை” யும் இலக்கிய விமர்சனத்தைத் தீவிரமாக ஆதரித்தது. புதுக்கவிதையின் உள்ளடக்கத்தை ஆராய்ந்து பேராசிரியர் நா.வானமாமலை

எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

அவரைத் தொடர்ந்து வேறு சிலரும் விமர்சனக் கருத்துக்களை அறிவித்தார்கள். அவற்றுக்கு மறுப்பாக சி. கனகசபாபதி போன்றவர்களிடமிருந்தும் கட்டுரை களை வாங்கி தாமரை பிரசுரித்தது.

முற்போக்கு இலக்கியம், மற்றும் பிற்போக்கு நசிவு இலக்கியங்கள் குறித்த விமர்சனங்களையும், நல்ல நாவல்கள், கவிதை நூல்கள் பற்றிய விமர்சனங்களையும் மதிப்புரைகளையும் தாமரை வெளியிட்டுள்ளது. இவை எல்லாம் எழுத்துத் துறையில் புதிதாகப் பிரவேசிக்கும் இளையவர்களுக்கும், வாசகர்களுக்கும் இலக்கிய உணர்வு ஏற்படுத்தின.

சுத்த அல்லது தனி இலக்கியவாதிகள் செய்யாதசெய்யத் தவறிவிட்ட . சில முக்கியமான காரியங்களை, சமூகக் கண்ணோட்டத்துடன் (மார்க்சீயப் பார்வையோடு) அனைத்தையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்திய முற்போக்கு இலக்கியவாதிகள் செய்தார்கள். சிறுகதைகளை,

இ வாசகர்களும் விமர்சகர்களும் #58