பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல்கள் எழுதப்படுவதற்கு உந்துதலாக அமைந்து இருந்தது.

கிராமங்களிலும் நாவல் படிப்பவர்கள் மட்டுமல்ல, படிப்பவர்களை ரசித்துப் பேசி மகிழும்படி தூண்டுகிற நாவல்களை எழுதி வெளியிடக் கூடியவர்களும் 1920 களிலேயே இருந்திருக்கிறார்கள்.

குருமலை பொன்னுசாமி பிள்னையும், அவர் எழுதிய பொற்றொடி' என்ற நாவலும் இதற்கு ஒரு உதாரணமாகக் கூறப்படலாம்.

இந்த விதமான நாவல்கள் எல்லாம் கதைச் சுவையையே முக்கிய ஜீவனாகக் கொண்டிருந்தன. மக்கள் விறுவிறுப்பான கதை ஒட்டத்தை, அப்புறம் என்ன நடந்தது - மேலே என்ன நடக்கும் என்று உளக்கிளர்ச்சியையும் அறியும் அவாவைத் தூண்டி விடுகிற சம்பவக் கோவையையே பெரிதும் விரும்பும் இயல்பினர் என்பதை இவை சுட்டிக்காட்டின.

ஒருவர் படிக்கப் பலர் கேட்டு ரசிப்பது என்பது புதிய உத்தி ஒன்றுமில்லை. இந்த நாட்டில் பெரிய புராணமும், ராமாயணமும், மகாபாரதமும், திருவிளை யாடல் புராணமும், விக்கிரமாதித்தன் கதை, மதனகாம ராஜன் கதை; மற்றும் அல்லி அரசாணி, பவளக்கொடி, புலந்திரன்களவு, நள தமயந்தி போன்ற பலப் பல கதை களும் இந்த விதமாகத் தான் படித்து அறியப்பட்டிருந்தன.

படிக்கத் தெரிந்தவர்கள் குறைவாக இருந்தார்கள். புத்தகங்கள் அதிகம் அச்சிடப் பட்டதில்லை . அச்சான

வாசகர்களும் விமர்சகர்களும் 7