பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயினும், இலக்கிய விமர்சனம் ஆரோக்கியமான தடத்தில் இட்டுச் செல்லப்படவில்லை. படைப்புகளை ஒதுக்கி விட்டு படைப்பாளிகளைப் பரிகசித்துத் தாக்குவது, தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சியால் குறித்த சில எழுத்தாளர்களைப் பழித்துக் கொண்டே இருப்பது; தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டே, தங்களுக்குப் பிடிக்காதவர்களையும், வே ண் டாத வர் களையும், முரட்டடியாகத் தாக்குவது; எதுவுமே உருப்படியாக இல்லை, எல்லாமே மட்டம் தான் என்று, திரும்பத் திரும்பக் கூறி, பக்கம் பக்கமாக, கட்டுரை கட்டுரையாக எழுதி பத்திரிகையின் பக்கங்களை வீணடிப்பது - இவை போன்ற க்ாரியங்கள் 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களிலும் சிறு பத்திரிகைச் சூழலில் வெகு அதிகமாக நடைபெற்றன.

எழுத்து காலத்தில், விமர்சனத் துறையில் நல்ல வளர்ச்சி பெறக்கூடும் 5了6苻 நம்பிக்கை காட்டிய வெங்கட்சாமிநாதனும், தருமு சிவராமுவும் @Gurಹವಿಸr தீவிர ஆதரவாளர்களாகச் செயல்பட்டார்கள். ஆரம்ப கட்டத்தில் பரஸ்பரம் புகழ்ந்து கொண்டு, மற்றவர்களைக் கடுமையாக விமர்சித்து வந்த இவ்விருவரும் விரைவிலேயே எதிர் எதிர் முகாம் அமைத்து, ஒருவரை ஒருவர் பழித்தும் பரிகசித்தும் தாக்கியும் நீள நீளக் கட்டுரைகள் எழுதுவதில் மகிழ்ச்சி காணலானார்கள்.

‘யாத்ரா' என்ற காலாண்டு ஏடு வெ. சாமிநாதன் எழுத்துக்களை அதிகம் தாங்கி வந்தது.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 160