பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இக்கருத்தரங்குகள் இலக்கிய உணர்வு வளர்ந்து பரவுவதற்குத் துணை புரிந்தன. வெளியிடப்பட்ட நூல்கள் ஆய்வாளர்களுக்கும் இலக்கிய மாணவர்களுக்கும் பெரிதும் உதவக்கூடியவையாக அமைந்திருந்தன.

எனினும், இக்கருத்தரங்குகள் மேற்கொண்ட நாவல் ஆய்வுகள் பூரணமான விமர்சனம் ஆக மாட்டா. காரணம், ஒவ்வொரு வருடமும் குறித்த சில படைப்பாளிகளின் நாவல்கள் தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்நாவல்கள் బీ__ இலக்கிய அடிப்படையில் முழுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப் பட்டதில்லை. தமிழ் நாவல்களில் மனித விமோசனம்’ "தமிழ் நாவல்களில் சாதி, சமூகப் பிரச்னைகள்’ ‘தமிழ் நாவல்களில் முற்போக்குக் கருத்துக்கள்' என்ற தன்மையில், ஏதேனும் ஒரு கோணத்தில் தான் ஆராயப்பட்டன. இந்நோக்கிலேயே விமர்சனக் கட்டுரைகள் தயாரித்து

அளிக்கப்பட்டன.

இருந்த போதிலும், தமிழ் இலக்கிய உணர்வு வாசகர்களிடையே பெருகுவதற்கும், ரசிக ர்களிடம், நாவல்கள் பற்றிய அறிமுகம் ஆழ்ந்து பரவுவதற்கும் திரு. பாக்கியமுத்து அளித்த ஊக்கமும் உற்சாகமும் பாராட்டப்பட வேண்டியவை. ஒவ்வொரு வருடமும், கருத்தரங்கின் கடைசி அமர்வாக, அக்காலகட்டத்திய சிறப்பான புதுநாவலை விரிவாக அறிமுகப்படுத்த அவர் திட்டமிட்டுச் செய்த பணி உயர்வானது தான்.

இந்த விதத்தில் ஐசக் மைராசனின் கீறல்கள்.

த ஐசக அரு றலகள ஆதவன் காகித மலர்கள்’, நாஞ்சில் நாடனின்

வாசகர்களும் விமர்சகர்களும் 162