பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இனியவன் இலக்கிய வீதி' நிகழ்ச்சியை ஒரே ஊரில் நடத்துவதில் திருப்தி கொள்வதில்லை. வெவ்வேறு இடங்களில் கூட்டம் ஏற்பாடு செய்து, வாசகர்களுக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகம் அளித்து வருகிறார்.

நவீன இலக்கியத்தில் (மாடர்ன் லிட்டரேச்சர்') பல்கலைக் கழகங்கள் கவனம் செலுத்த முற்பட்ட பிறகு, பேராசிரியர்களில் சிலர் நாவல்கள், சிறுகதைகள், புதுக் கவிதைப் படைப்புகள் பற்றி எல்லாம் ஆய்வு நூல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

எனினும், பேராசிரியர்கள் சிலர் எழுதியுள்ள ஆய்வுகள். ஆழ்ந்த விமர்சன அடிப்படையில் அமைய வில்லை என்பதும், பெரும்பாலும் பாடத்திட்ட அமைப்பில் கல்லூரிகளுக்குப் பாடநூலாக வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய புத்தகங்கள் எழுதப் படுகின்றன என்பதும், குறைபாடுகளுக்குக் காரணங்கள்

ஆகின்றன.

இதே போல, எம். பில். பட்டப் படிப்புக்கு என்றும், பி. எச்.டி. பட்டம் பெறுவதற்காகவும், எம். ஏ. படித்தவர்களும் கல்லூரி ஆசிரியர்கள் பலரும் தற்கால இலக்கியங்களை தனித்தனிப் படைப்புகளாகவும் குறிப்பிட்ட சில படைப்பாளிகளின் படைப்புகள் என மொத்தமாகவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இவற்றில் அநேக ஆய்வுகள் பின்னர் புத்தக வடிவம் பெறவும் செய்கின்றன.

இ வாசகர்களும் விமர்சகர்களும் #64