பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தகைய ஆய்வுகள் முழுமையான இலக்கிய ஈடுபாட்டுடன் செய்யப்படுவதில்லை. பட்டம் பெற வேண்டும் என்ற துடிப்புடையவர்களால், பட்ட ஆய்வுக் கென்று வரையறுக்கப்பட்ட விதி முறைகளுக்கு உட்பட்ட முறையில், சில ஃபார்முலா” க்களுக்குத் தக்கபடி தயாரிக்கப்படுகின்றன.

எனவே, இ வு ற் றில் பெரும்பாலானவை மேலோட்டமானவையாக அமைந்து காணப்படுகின்றன. ஆழ்ந்த விமர்சனங்களாக இவை எழுதப்படுவதில்லை.

எம். ஏ. படித்தவர்களும், பேராசிரியர்களும், தரமான இலக்கியத்தில் உண்மையான அக்கறை கொண்டு, தற்காலப் படைப்புகளைப் படிப்பதிலும், அவற்றை சிரத்தையோடு ஆய்வு செய்வதிலும் முனைப்பு கொண்டால், விமர்சனத் துறை வளம் பெற முடியும்,

மொத்தமாகப் பார்க்கிற போது, தமிழில் விமர்சனக்

கலை வளரவில்லை என்பது எளிதில் விளங்கும். இதற்குக் காரணம் என்ன?

இதற்கும் பத்திரிகைகளையும் புத்தகப் பிரசுரகள் களையும் தான் குற்றஞ்சாட்ட வேண்டியிருக்கிறது.

வெகுகாலமாகவே, பத்திரிகைகள் சிறுகதை களையும், தொடர்கதைகளையுமே விரும்பிப் பிரசுரிக் கின்றன. வாசகர்கள் இவற்றைத் தான் படிக்கிறார்கன்; கட்டுரைகளை அவர்கள் விருப்பத்தோடு படிப்பதில்லை;

விமர்சனக் கட்டுரைகளை அவர்கள்தொடவே மாட்டார்கள்

இ. வாசகர்களும் விமர்சகர்களும் 155