பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


என்பது பத்திரிகைகள், புத்தகங்கள் பிரசுரிப்பவர்களின் கருத்து. அதனால், அவர்கள் விமர்சனங்களை வரவேற்பதில்லை.

எழுதுகிறவர்களில் பெருமபாலோர் பத்திரிகைகளின், புத்தக வெளியீட்டாளர்களின், தேவையையும் விருப்பத் தையும் அனுசரித்தே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எழுதுகிறவர்களுக்குக் கதை எழுதுவது சுலபமான கரசியமாக இருக்கிறது.

விமர்சனம் எழுதுவது என்றால், வெளி வருகிறவற்றை எல்லாம் படிக்க ேவ ண் டு ம் . அனைத்தையும் படிக்க இயலாது போனாலும், முக்கிய மானவற்றையாவது வாசித்தாக வேண்டும். படிப்பதையே தேவையற்றது என்றும், போர்’ (BORE) என்றும் கருதுகிற எழுத்தாளர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அப்புறம் அவர்கள் எப்படி விமர்சனத்தில் ஈடுபட இயலும்?

கேரளம் போன்ற அண்டை மாநிலங்களில் நிலைமை இவ்வளவு மோசமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மலையாளம் வாரப் பத்திரிகைகள் விமர்சனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. விமர்சனக் கட்டுரைகளைப் பிரசுரித்து, வாசகர்களை சிந்திக்கத் துண்டுகின்றன. தினசரிப் பத்திரிகைகள் கூட, வார அனுபந்தங்களில் இலக்கிய விஷயங்கள், எழுத்தாளர்

பிரச்னைகன், புத்தக விமர்சனங்களை அதிகமாக

இ வாசகர்களும் விமர்சகர்களும் 166