பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வெளியிடுகின்றன. இதனால் மலையாளத்தில் விமர்சகர்கள் பலர் வளர வாய்ப்பு கிட்டியுள்ளது.

'நம்முடைய மொழியின் மீது நமக்கு ஆழ்ந்த பற்று இல்லையென்று சொன்னால் தமிழ்ச் சகோதரர்கள் நம் மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. சாதாரணக் கதைகளைப் படித்துப் பொழுதைப் போக்குகின்றோம். நம்முடைய வாழ்க்கைக்கு வழி காட்டக் கூடிய விஷயங் களைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை. நம்முடைய அறிவு பிரகாசிப்பதற்கானதைச் செய்கின்றோமில்லை. அதை நசுக்குகின்றோம். நம்முடைய இதயத்தை அழுக வைத்து விடுகிறோம். புழுக்கள் நுழைவதற்குக் கேட்பானேன்?

அறிவு வளர்ச்சிக்கு உதவக்கூடிய தரமான நூல் களை எழுதியுள்ள அறிஞர் சாமிநாதசர்மா 1940 களில் இப்படி எழுதினார். அதன் பிறகு நிலைமை மோசமாகத் தான் போயிருக்கிறது என்பதை நம்நாட்டின் சகல திலைம்ை களையும் கவனித்து வந்திருப்பவர்கள் - கவனிப்பவர்கள்

உணர்வார்கள்.

வாசகர்களின் அறிவுத் தரம் உயர்ந்து விடாதபடி அவர்கள் ரசனையைக் கெடுத்து, தல்லுணர்வுகளை மழுங்கடிக்கும் நச்சு எழுத்துக்களையும் நசிவுப் படைப்பு களையும் மேலும் மேலும் உற்பத்தி செய்து, நாட்டு மக்கள் மீது திணிப்பதில் கருத்தாக இருக்கிறார்கள் பத்திரிகைகளை வணிகத் தொழில் முறையில் நடத்துகிற பன அதிபர்கள்.

பத்திரிகைகளின் தரம் குறைந்த தன்மைகனை விடாது எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 16?