பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. கே. சிதம்பரநாத முதலியார் எழுதியிருப்பது நினைவு கூரத்தக்கது.

"கல்கி எழுதிய கதைகள் (பவானி பி. ஏ. பில். , திருவழுந்து ர் சிவக்கொழுந்து போன்றவை) விகடனில் நாலைந்து வாரங்கள் தொடர்ந்து வந்தன. ஒவ்வொரு வாரமும், கதையை ஆவலுடன் வாசித்த ரசிகர்கள், அடுத்த வாரம் கதை' எப்படி அமையும் என்று அறியத் தவிக்கும் ஒரு துடிப்புடன் பத்திரிகையை எதிர்பார்த்தார்கள்.

கல்கி தனது முதலாவது .ெ த ச ட ர் க ைத யாக "கள்வனின் காதலி'யை விகடனில் எழுதலானார். அதன் ஆரம்பமே வாசகர்களின் ஆவலைத் துண்டுவதாக அமைந்திருந்தது. ஒவ்வொரு வாரமும் உரிய விறுவிறுப் போடும், சஸ்பென்சுடனும் கதை வளர்ந்தது. அது வாசகர்களின் ஆர்வத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்க வைத்தது.

'ஆனந்த விகடன்’ பத்திரிகைப் பார்சல் ரயில் மூலம் வந்து சேர்கிற கிழமையில், ரயில்வே ஸ்டேஷன்களில் வாசகர்கள் பரபரப்புடன் காத்திருப்பது பல ஊர்களிலும் வழக்கமாயிற்று. ரயில் வந்து, பார்சல் இறக்கப்பட்டு, ஏஜண்டு அதைப் பெற்று, பண்டிலைப், பிரித்து பிரதிகளை வெளியே எடுப்பதற்குள் வாசகர்கள் பொறுமையிழந்து தவிப்பதும் அவசரமாகப் பறப்பதும் சகஜ நிகழ்ச்சி ஆயிற்று.

ஸ்டேஷன் பிளாட்பாரத்திலேயே ஏஜன்டிடமிருந்து ‘விகடன் பிரதியை விலைக்கு வாங்கி, பரபரப்புடன்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 19