பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ வ் வ் வ் வ் வ் வ ள வும் கதைகள்’ என்று அழுத்தமாகக் கூறிக் கொண்டு வெளிவந்த பி. எஸ். ராமையா காலத்து மணிக்கொடி யும் சரி, அவர் விலகிவிட்ட பிறகு கதைகளோடு அரசியல் கட்டுரை களையும் சினிமா விஷயங்கள் மற்றும் படங்களையும் தாங்கி வந்த மணிக்கொடி யும் (ப. ரா. என்ற ப. ராமஸ்வாமியை ஆசிரியராகக் கொண்டது.) சரி; வாசகர்களிடையே பெரும் அளவில் வரவேற்பு பெற முடித்ததில்லை.

"மணிக்கொடி”யில் எழுதிய எழுத்தாளர்களின் கதைகளைப் படித்து வியந்து, அருமையான சிருஷ்டிகள்: என்று ரசித்து மகிழக் கூடிய வாசகர்கள் குறைவான எண் ணிக்கையிலேயே இருந்தார்கள். ஜனரஞ்சகமான எழுத்துக்களை விரும்பிப் படித்த பல்லாயிரக்கணக்கான் வாசகர்களுக்கு மறுமலர்ச்சி ரீதியான - இலக்கியத் தரமான - கதைகள் புரியாத விஷயங்களாகத் தான்

தென்பட்டன.

மேலோட்டமான தன்மை கொண்ட கதைகளையும், ஆழ்ந்த நோக்குடன் எழுதப்பட்ட கதைகளையும் வெளிவிட்டு வந்தது 'கலைமகள்'. அந்த இலக்கிய காசிகையும் 1930 களில் தான் பிறந்திருந்தது. அது, கதைகளோடு பலவகைக் கட்டுரைகளையும், சமூகத்தில் உயர் அந்தஸ்து வகித்த பெரிய மனிதர்கள் பலரது எழுத்துக்களையும் பிரசுரித்துக் கொண்டிருந்தது. வாசகர்கள் மத்தியில் அது நிதானமாக இடம் பெற்று

வளர்ந்தது.

வாசகர்களும் விமர்சகர்களும் 22