பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மக்களிடையே அரசியல் உணர்வு அதிகரித்து வந்ததால் அவ்வுணர்வைத் தூண்டி வளர்க்கும் விதத்திலேயே பத்திரிகைகள் விஷயங்களைத் தந்து கொண்டிருந்தன. அதற்கேற்ற வகையில் சிறு சிறு பிரசுரங்களும் வெளிவந்து வாசகர்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றன.

முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய விவரிப்பு, விளக்கங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் போன்றவை கலனா, அரையனா விலையில் சிறு பிரசுரங்களாக

வந்து விற்பனை ஆயின.

ஒரனா விலையில், பெரிய மனிதர்கள், அறிஞர்கள், சான்றோர்களின் வரலாறுகள் எளிய நடையில் எழுதப்பட்டு பிரசுரமாயின. அவை எல்லா இடங்களிலும் விற்பனை

ஆகிக் கொண்டிருந்தன.

பலரகமான விஷயங்களையும் - பயனுள்ளவை, பயனில்லாதவை அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா மனிதர்களுக்கு இருக்கிறது. மனிதர்களின் இத்தகைய உணர்வுகளுக்குத் தீனி போடு வதன் மூலம் தங்களை வளர்த்துக் கொள்வதில் கருத்தாக இருக்கிறார்கள் பலர்.

இந்த ரகத்தினர், வாசகர்களின் மனஅரிப்புக்குச் சொறிதல் சுகம் தருகிற கிளுகிளுப்பு விஷயங்களைக் கொடுத்து அவர்களைக் கிறங்க வைக்கிறார்கள். மீண்டும் மீண்டும் அந்த சுகத்தை நாட வைக்கும் போதைத் தன்மையை உண்டாக்கி விடுகிறார்கள்.

3

2.

வாசகர்களும் விமர்சகர்களும்