பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விகடன் பல வருடங்கள் பிரசுரித்து வந்தது. இவற்றையும் வாசகர்கள் ரசிக்கத் தவறவில்லை.

ஆர் . கே , நாராயண் ஆங்கிலத்தில் எழுதிய, பிரசித்தி பெற்ற புத்தகமான ஸ்வாமி அண்ட் ஹிஸ் ஃபிரண்ட்ஸ்' என்பதை சுவாமியும் சிநேகிதர்களும்’ என்று தமிழில் விகடன் தொடர்ந்து வெளியிட்டது.

இப்படி நல்ல விஷயங்களும் கொடுக்கப்பட்டன. அவற்றை வாசகர்கள் ரசித்துப் படித்தார்கள். அவை பற்றிப் பேசியும் மகிழ்ந்தார்கள்.

அந்நாட்களில், தமிழ் நாட்டினர் இந்தி மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிரசுரம் தீவிரமாக நடைபெற்றது. வாசகர்களில் இந்தி கற்கும் ஆவல் உடையவர்கள் கற்றுப் பயன் பெற வேண்டும் என்ற நோக்குடன் விகடன்’ இதழ்தோறும் இத்திப் பாடங்களை வெளியிட்டு வந்தது. இந்தி படிக்க விரும்புவோர் ஆர்வத்துடனும் உற்சாகத்தோடும் படிக்கக் கூடிய விதத்தில் பாடங்கள் எளிய முறையில், நகைச்சுவை கலந்தி கதைகளாகவும் ரசமான கட்டுரை களாகவும் தயாரித்து வெளியிடப்பட்டு வந்தன. அவற்றைப் படித்துப் பயனடைந்த வாசகர்கள் பலர் ஆவர்.

அதே போல, யோகாசனப் பயிற்சியையும் விகடன் மேற்கொண்டது. ஆங்கிலப் பத்திரிகைகள் சில, வாசகர்கள் யோகாசனங்களைப் பயின்று வலிவும்

வனப்பும் ஆரோக்கியமும் பெற வேண்டும் எனும்

வாசகர்களும் விமர்சகர்களும் 25