பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நோக்குடன் ஆசனப் பயிற்சி முறைகளை வெளிட்டு வந்தன. தமிழில் ஆனந்த விகடன் அதை முதன் முதலாக செயல்படுத்தியது.

பெங்களுர் சுந்தரம் என்பவர் ஆனந்த ரகஸ்யம்' வலிவும் வனப்பும்' ஆரோக்கிய ரகஸ்யம்' என்ற தலைப்புகளில், வருடக் கணக்கில், யோகாசனப் பயிற்சிகள் மற்றும் உடல்பயிற்சி முறைகள் பற்றிதொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். படிப்பதற்குச் சுவையான விதத்தில் எழுதப்பட்ட அக்கட்டுரைகள், வாசகர்களில் மிகப் பலரை ஆசனங்களையும் இதர உடல் பயிற்சிகளையும்

கற்றுக் கொள்ளும்படி தூண்டின.

வ சகர்கள் அயல்மொழிக் கதைகளின் தமிழாக்கங்களையும் ரசித்துப் படிக்கத்தான் செய்தார்கள். பத்திரிகைகள் பிறமொழிக் கதைகளின் மொழி பெயர்ப்புகளை அவ்வப்போது தந்து கொண்டிருந்தன.

மணிக்கொடி இந்திக் கதைகளையும், உலகத்துச் சிறுகதைகளையும் மொழி பெயர்த்துக் கொடுத்தது. புதுமையும் நடை நயமும், அழுத்தமும் ஆசிசிசி, சோதனைத்தன்மையும் கொண்ட விதம் விதமான கதைகள்

தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

ஆனந்த விகடன், ரவீந்திரநாத தாகூரின் குமுதினி” நாவலை மொழி பெயர்த்துத் தொடர் கதையாக பிரசுரித்தது. பிறகு, பிரேம் சந்த்தின் சேவாசதனம்’ நாவலை தொடர்கதை ஆக்கியது. பெண்களும் அவற்றை ரசித்துப் படிக்கத் தவறவில்லை,

இ வாசகர்களும் விமர்சகர்களும் 26