பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சினிமா, நாட்டிலே அப்போது தான் அடிவைத்து மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. திரையில் பொம்மைகள் ஒடி ஆடி சாகசங்கள் பலவும் நிகழ்த்து கின்றன; அது பெரும் அதிசயம் என்ற தன்மையில்

தான் சலனப்படம் மக்களை வசீகரித்தது முதலில்.

மேல் நாட்டுப் படங்களைப் பின்பற்றிய வட இந்தியப் படங்கள் தோன்றின பேசும் படம் வந்தது. தமிழ் நாட்டினரும், வடஇந்தியப் படங்களைக் காப்பி அடித்து தமிழ் படங்கள் தயாரித்தனர். படங்கள் நடப்பதும், ஆடுவதும், ஓடுவதும் பெரும் ஆச்சர்யமாக இருந்ததோடு, அவை தங்களைப் போலவே பேசு கின்றன, பாடுகின்றன என்பது மிகப் பெரும்

அதிசயமாகப் பட்டது மக்களுக்கு.

ஆங்கில, அமெரிக்க சினிமாப் பத்திரிகைகள் இந்தியாவில் இறக்குமதி ஆயின. அவற்றைப் பார்த்து வடஇந்தியாவில் அநேகம் ஆங்கில சினிமாப் பத்திரிகைகள் பிறந்தன. அவற்றின் தாக்கத்தால் தமிழ் நாட்டிலும் சிலர் ஆங்கிலத்தில் சினிமா சஞ்சிகைகள் பிரசுரிக்கத் துணிந்தார்கள்.

அவர்களது முயற்சிகளின் பாதிப்பினாலும், மக்களிடையே சினிமா பெற்றுக் கொண்டிருந்த ஆதரவும் ஆர்வமும் - அவற்றின் விளைவாக எழுந்த அறிந்து கொள்ளும் ஆசையும் ஏற்படுத்திய ஊக்கம் காரணமாகவும்,

தமிழிலும் சினிமாப் பத்திரிகைகள் தோன்றின.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 27