பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரப்படுகிறவை தங்களுக்கு லாபம் பயக்கக் கூடிய விதத்தில் மலிவாகக் கிடைக்க வேண்டும் என்று எதிர் :ார்ப்பவர்களே மிகுதியாக இருந்தார்கள் என்று தோன்றியது.

1930 களின் முற்பகுதியில், காலணா - அரையனா ஒரு அனா விலையில் பிரசுரிக்கப்பட்ட அரசியல் பிரச்னை வெளியீடுகள், தலைவர்களின் வரலாறுகள் முதலியன தமிழ் நாட்டில் நன்கு விற்பனையாகிக் கொண்டிருந்தன.

அந்தக் காலகட்டத்தில் தான்- சற்று முன் பின்னாக இருக்கலசம் - புரட்சி வீரர் பகத்சிங் தூக்கிலிடப்பட்டது; இளைஞள் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் அகில இந்திய காங்கிரசிலிருந்து விலக்கப்பட்டது போன்ற முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் பற்றிய சிறு சிறு புத்தகங்கள் பலப் பல வெளிவந்து நன்கு விற்பனையாயின.

அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம், பூரண சுதந்திரம் கோரிய தேசீயவாதிகளுக்கு ஒரு கண் துடைப்பு முயற்சியாக, மாகாண சுயாட்சி வழங்க முன் வந்தது.

பத்திரிகைகளில் எல்லாம் மாகாண சுயாட்சி பற்றிய பிரஸ்தாபம் அதிகமாக அடிபட்டது. விளக்கக் கட்டுரைகள் வெளியாயின.

அந்த சந்தர்ப்பத்தில், சிறுகதை இலக்கியப் பத்திரிகையான * மணிக்கொடி யை நடத்திக் கொண்டிருந்தவர்கள், பொருளாதார பலம் தேடுவதற்காக, புதிதாகப் புத்தகப் பிரசுர முயற்சியில் ஈடுபடத்.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 30